செவ்வாய், 13 செப்டம்பர், 2011
விஸ்வகர்மா விருது
மயன்
http://bigviswakarma.blogspot.com/
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011
விஸ்வகர்ம
ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இ¢ருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது.
‘வேள்வி செய்யாத பார்ப்பனர்' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்', விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்' பிரிவிலேயே சேர்க்கிறது.8
விஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்' எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்' (அக்ஷம் = கண்) என்ற சொல்லையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி' என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி' என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.
அரசர்களின் மனையை - அரண்மனையை வடிவமைக்கும் ஸ்தபதியை ‘நூலறி புலவர்' என நெடுநல்வாடை (வரி 76) குறிப்பிடுகிறது. சரியாகச் சொல்வதானால் அவர்கள் நூல் அறிபுலவர்கள் மட்டுமல்லர், நூல் உருவாக்கிய புலவர்கள். இத்தகைய விஸ்வகர்ம சமூகத்தவரின் பங்களிப்பு, சங்க காலச் சமூகத்தின் வாழ்வியலில் முதன்மையான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாகச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களுக்கே, பாண்டிய அரசகுலம் உருவான காலப்பகுதியிலும் எழுத்தறிவு சார்ந்த நிர்வாக நடைமுறைகள் உருவான காலப்பகுதியிலும் விஸ்வ கர்ம சமூகத்தவர் தாம் குலகுருக்களாக இருந்திருக்க வேண்டும். அத்தகைய மக்கட் பிரிவினர் தாம் ஆதிச்சநல்லூரில் உலோக நாகரிகத்தை அறிமுகப்படுத்தினர்
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011
கம்பர் ஏர் எழுபது
பாராலு முழவாலும் பயிராக்கி யுயிர்வளர்க்கும்.
பேராளர் தம்மாலே பிறருடைய பெருமையெல்லாம்,
ஏராலெண்டிசை வளர்க்கும் எழுபத்தொன்பது நாட்டில்,
காராளர் பெருமையெல்லாம் கண்ணாளர் கைத்தொழில்,
பாரின் வளம் பயிரின் வளம் பரந்த புகழ் பெருக்காளர்,
ஏரின்வள மிந்தவள மெவ்வளவுண்டவ்வளவும்,
காரின்வள மனையகொடைக் கண்ணாளர் கைத்தொழிலின்,
சீரின்வள மல்லாத சிறப் புண்டோ செப்பீரே,
வண்டாரும் பொழிற்கங்கை வாளார்ந்த நான்முகத்துக்,
கொண்டாடிக் கொண்டமுடி கொடுத்தாரே யெங்குமணங்,
கண்டாரே கலியுகத்திற் கண்ணாளர் தம்மை யல்லால்,
உண்டாகிய பிறருளரோ வுளராகி லுறையீரே,
காதலால் நிதிவழங்குங் கண்ணாளர் கைத்தொழிலி,
னோதலால் வளவியதோ ரோங்கியருலத் துக்கதோ,
கோதிலா விளைவயலைக் கொழுவாலுங் கருவாழும்,
ஆதாலாலவர் பெருமை யாருரைக்க வல்லாரே.
பண்ணான வேழிசைக்கும் படையான வாணிபர்க்கும்,
எண்ணான எழுத்தினுக்கும் இயலான உயிர்களுக்கும்,
மண்ணான மன்னவற்க்கும் வாழ்தொண்டை நாட்டார்க்கும்,
கண்ணாளர் கைத்தொழில்போலுண்டாகிற் காட்டீரே.
கலையிட்ட கண்ணாளர் கைத்தொழின் றாமாகி,
னிலையிட்டு முடிப்பாரார் நித்தருமா தான்பணிந்து,
உலையிட்ட கருவிகளா முயர்கருவி வீழாமே,
தலையிட்ட செம்பியனுந் தலங்காக்க மாட்டனே,
அன்னை யெனமுதலாய வம்புவியல் யாவதற்கு,
முன்னையமு தூட்டுவதும் பெருக்காள ருழவன்றோ,
மன்னிய சீர்முதலாய் வழிவந்த தொல்குலத்தோர்,
கன்னிமுதற் றிருவாளர் கண்ணாளர் தம்மாலே.
மேற்கோள் நூல்;- வேலூர் தீர்ப்பு,
நூல் வெளியீடு;- சென்னை;சிந்தாதிரிப்பேட்டை,
விஸ்வகுலோத்தாரண அச்சியந்திரசாலைற்
அச்சடிக்கப்பட்டது.
1913-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011
வரலாற்றில் ஐந்தொழிலாளர்கள்
என்னை பற்றி நான் சிறுவயதிலிருந்து சரித்திரநூல்கள் படிப்பது பழக்கம் இருந்தது.சரித்திர நாவல்களில் எல்லாம் நமது சமுதாயத்தினர் முக்கிய கதாபாத்திரமாக இருந்தனர்.`கல்கியின் சிவகாமி சபதம்` சாண்டில்யன்,அகிலன்,விக்ரமன் இவர்களின் நூல்களில் நமது சமுதாயத்தினரை பற்றி தகவல்கள் காணக் கிடைத்தனா.நமது சமுதாயத்தினரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்காக நான் பல வரலாற்று நூல்களையும் கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் ஆராய்ந்து இக்கட்டுரையை நமது சமுதாயத்திற்க்கு சமர்ப்பிக்கிரேன். இறைவனுக்கு கோட்டமும் மன்னருக்கு கோட்டையும் அரண்மணையும்,பெருமக்களுக்கு மாடமாளிகையும் கல் தொடங்கி வைரம் வரை நவரத்தினங்களிலும் இரும்பு துவங்கி பொன் வரையிலும் அனைத்து உலோகங்களின் தன்மைகளையும் சிறப்புகளையும் அரிதின் ஆராய்ந்து அவைகளுக்கேற்றவாறும் தேவைகளுக்கு ஏற்றவாறும் ஏர்முனைச் சாதனங்கள் துவங்கி போர்முனைச் சாதனங்களையும் மரத்திலான பொருள்களையும் உற்பத்தி செய்து உலகிற்க்கு வழங்கியவர்கள் நமது சமுதாயத்தினர். நமது முன்னோர்களுக்கு மன்னர்கள் பெரும் கொடைகள் கொடுத்துள்ளனர். தஞ்சை பெரிய கோயிலை கட்டிய தலைமை சிற்பிக்கு இராஜராஜ சோழன் குஞ்சாரமல்ல பெருந்தச்சன் என்னும் பட்டமும் குலோத்துங்க சோழ ஆச்சாரி என்ற பட்டம் வழங்கியுள்ளார். கண்ணுள் வினைஞனர் [விஸ்வகர்மா] சமுதாயத்தின் தோற்றம் எத்துணை சிறப்புடையதாக சங்க இலக்கியங்கள்,கல்வெட்டுகள்,செப்பேடுகள் பல சான்றுகள்தருகின்றன. வரலாற்று நூல்கள் ஆராய்ந்தபோது நமது சமுதாயத்தினரைப் பற்றி பல தகவல்களை காண நேர்ந்தது. இதனை நமது சமுதாயத்தினருக்கு தெரிவிக்கும் வகையில் இந்த தகவலை வெளியிடுகிரேன். இப்படிக்குஅன்பன், சதாசிவம் குடிமங்கலம்