சென்னை
பல்கலை. பேராசிரியருக்கு விஸ்வகர்மா விருது
சிதம்பரம்,
மார்ச் 6: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக கட்டடவியல் துறை பேராசிரியர்
முனைவர் பி.என்.ரகுநாத்தின் (படம்) ஆய்வு தொழில்நுட்பம் மற்றும்
பங்களிப்பை பாராட்டி அவரை மத்திய அரசு திட்டக்குழுவின் கீழ் செயல்படும்
கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமம், விஸ்வகர்மா விருதுக்கு தேர்வு
செய்துள்ளது.÷புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 7)
திட்டக்குழு சார்பில் நடைபெறவுள்ள விழாவில் பி.என்.ரகுநாத்துக்கு இவ்விருது
வழங்கப்படவுள்ளது. பேராசிரியர் பி.என்.ரகுநாத் அண்ணாமலைப் பல்கலைக்கழக
முன்னாள் அறிவியல்புல முதல்வர் பி.நரசிம்மராவின் மகனாவார். இவர் அண்ணாமலைப்
பல்கலையில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







